தமிழர்கள் தன்னகத்தே செழுமையான மொழியையும், உயரிய நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களாக விளங்கி வந்திருக்கிறோம். அந்த வகையில் நம்முடைய இலக்கியங்கள், நாம் கற்றுகொண்ட அறநெறிகள் யாவும் நம் வாழ்கையை செழுமைபடுத்தவே செய்திருக்கின்றன. நாம் எந்த ஒரு இனக்குழுவை விடவும் மிக வீரியம் மிக்கவர்களாக, செயல் நேர்த்தி உடையவர்களாக இருந்துவருகிறோம்.
இன்று காலை நோர்வேயின் ஒஸ்லோ மாநகரத்தில் மூன்றாவது தமிழ் திரைப்படவிழாவில் பங்கெடுப்பதற்காக நிலக்கீழ் ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். அதனுள் அனைத்து பெட்டிகளிலும் என்னை கவர்ந்த ஒரு விளம்பரம் அது ஐரோப்பா, ஆப்பிரிக்க, மற்றும் பல நாடுகளில் பறந்து விரிந்திற்கும் லிபரா எனும் தொலைதொடர்பு நிறுவனுத்துடையது.இதில் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த நிறுவனம் மூன்று தமிழர்களால் நிறுவப்பட்டது. லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் என்பவர்களே அவர்கள். நார்வேயில் உள்ள தமிழர்களே கூட அறியாத ஒரு செய்தி இது. 2001 ஆம் ஆண்டு இம்மூவரும் தங்கள் ஒரு பயணத்தின் போது உதித்த சிறு பொறியில் ஆரம்பிக்கபட்ட நிறுவனம் இன்று பல மில்லியன் டாலர் பெருமதி உடையதாக வளர்ந்து நிற்கிறது.

இவர்களைப்பற்றி மேலும் இணையத்தில் தேடியபோது லிபராவின் தலைமை நிர்வாகி திரு. ரதீசன் யோகநாதன்(படத்தில் மூன்றாவதாக இருப்பவர்) கூறுகிறார் ஒருவன் திறமையை கற்று கொள்ளலாம் அறிவை வளர்த்து கொள்ளலாம் ஆனால் உளப்பாங்கு(attitude) அதை யாராலும் கொடுக்கமுடியாது மாறாக அவனுக்குள்ளாகவே இருக்கவேண்டும். இவர் தன்னுடைய 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்கு அகதியாக வந்து படித்து விமான பொறியியலில் பட்டம் பெற்றவர்.
இவர்கள் மூவரும் தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியை ஒரு அறகட்டளை அமைத்து சென்னைக்கு அருகில் ஆயிரம் ஈழ தமிழ் குழந்தைகளுக்கு கல்வியும் அவர்கள் குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். நான் அறிந்த வரையிலும் பிற தமிழர்கள் ஐரோப்பாவில் இருந்து மேல்மருவத்தூரிலும் இன்ன பிற சாமியர்களிடமும் ஈரோக்களில் பணத்தை கொட்டும் போது இவர்கள் தான் பட்ட துன்பம் தன் இனம் பட கூடாது என்று செயல்படுவது போற்றுதலுக்குரியது.