நம்மை ஐந்து முறை முட்டாள்களாக்கி எம்மினத்திற்கு தீராத துயரத்தை
கொடுத்து சன்னதம் ஆடிய, இன்னும் ஏமாளிகள் ஆக்க நினைக்கும் ஒரு மகா நடிகனை பற்றியே இன்றைய
பதிவு. மிக நெடிய தமிழர் வரலாற்றில் கருப்பு பக்கங்களை எழுதி தன்னை தானே தமிழின தலைவன் என்றும் கூறிகொண்ட மிக
கீழ்மையானவர். தமிழர்கள் இன்று படும் அனைத்து துயரங்களுக்கும் அது காவிரி பிரச்சனையானாலும்,
மீனவர்கள் எதிர்கொள்ளும் கச்சதிவு பிரச்சனையிலும், எம் தொப்புள்கொடி சொந்தங்கள் ஈழத்தில் ஒரே நாளில்
இனப்படுகொலை செய்யப்படதிலும் மூல காரணகர்த்தாக்களில் இவரும் ஒருவர்.
உலக சரித்திரத்தில் எத்தனையோ கொடிய மன்னர்கள், அரசியல்வாதிகளை கண்டும் படித்தும் இருக்கிறோம் அவர்களை
விஞ்சிய பொய், வஞ்சகம், சூழ்ச்சி துரோகமே உருவானவர். தன் ஆட்சிக்காகவும், குடும்பத்திற்காகவும்
மாபாதக செயல்கள் செய்து இன்று தள்ளாத வயதில் முகத்திரை கிழிந்து தொங்கும் தன் பேய் முகத்தை
மறைக்க இன்றளவும் நாடகங்கள் தடத்தும் நரி. ஆனாலும்
தமிழின் துணைகொண்டு இவர் உதிர்க்கும் வார்த்தைகளில் மயங்கியே அறிவிழந்தோம் நாம்.
ஒருமுறை "தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவது சகஜம்தானே" என்று
தன் ஊழலை வார்த்தை ஜாலங்கள் கொண்டு நியாயப்படுத்தியவர்.
தமிழருவி மணியன் ஒருமுறை இவரை பற்றி இவ்வாறு கூறினர் "தான் ஒருவன் மட்டும் ஒழுக்க கேடாக நடவாமல் இவரை சுற்றி இருப்பவர்களையும்
மாற்றுவது அதையும் கடந்து ஒட்டுமொத்த சமூகத்தையே பாழ்படுத்துவது"
எடுத்துகாட்டாக செல்வம் கொழிக்கும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தை பெற்றுக்கொண்டு
அதில் தன் கைப்பிள்ளை ராசாவை அமரவைத்து உலகிலேயே மிகபெரிய ஊழல் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம்
ஊழலை செய்தவர். ஊரிலிருந்து ஒரு அழுக்கு பையுடன்
இரயிலேரியவர் இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில்.
இந்திராகாந்தி காலத்தில் தன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள கட்சத்தீவை
தாரைவார்த்தது இன்றளவும் மீனவர் சாவதற்கு காரணம். ஒரு சரியான தருணத்தில் தமிழகத்திற்க்கு
சாதகமாக தீர்ப்பு வரும் நேரத்தில் காவரி வழக்கை திரும்பபெற்று காவரி வறண்டு போக காரணம். உச்சகட்டமாக ஊர் உடமை அத்தனையும் இழந்து உயிராவது காப்பாற்றப்படும் என்று போர்முனையில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை நாடகம் நடத்தி கொன்றது. போருக்கு பின் முள்வேலியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு காத்திரமாக எதுவும் செய்யாமல் "டெசோ" என்ற செத்துப்போன அமைப்பை கொண்டு இன்னும் இரத்தம் குடிக்க ஒரு ஓநாய் போல் கிளம்பி இருக்கிறார். இந்த நாடகம் இப்போது நிகழ்த்த காரணம் செய்த துரோகத்தை மறைக்கவும், வரபோகும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காகவுமே.
மத்திய ஆட்சியை நடத்துவதே இவர்கள்தான் பிறகு எதற்கு மாநாடு, கடிதம் எழுதுவது எல்லாமே ஏமாற்று வேலை. 1999 முதல் வாஜ்பாய் ஆட்சி, இரண்டு மன்மோகன் ஆட்சிக்காலங்கள் என்று தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டுகள் மத்தியில் மிக வலிமையாக ஆட்சி நடத்தி கொள்ளை அடித்துவிட்டு இன்று ஈழமக்களுக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் தருவேன் என்று கதையளக்கிறார், ஆடப்பாவி இப்போதாவது உன் வஞ்சகத்தை நிறுத்திக்கொள் உலகில் மானமுள்ள கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை தன் மண் மீட்கபோரடுவான்.


