எப்போதும் போலவே பணிசுமை மற்றும் நேரமேலாண்மை இல்லாததாலும் இந்த பயணத்திற்கான எந்த ஆயத்தமும் இல்லாமல் விடியற்காலை 4மணி பயணத்திற்கு இரவு 12மணி வரை பயண பொதிகளை எடுத்து வைத்துகொண்டிருந்தேன். இரவு தூங்க செல்லும்முன் மகள் தன் அம்மாவிடம் பேசிகொண்டிருந்தது என் காதில் விழுந்தது, அவளும் அவளுடைய பள்ளி பேருந்தில் வரும் தோழியும் பேசிக்கொண்டார்களாம் என்னைபோலவே அந்த குழந்தையின் அப்பாவும் அலுவல் நிமித்தமாக வெளிநாடு செல்கிறாராம் இருவரும் தத்தமது அப்பாவை மிஸ் செய்வோம் என்று பேசிக்கொண்டார்களாம், இதை கேட்டுக்கொண்டிருந்த நான் சிந்தனை வயப்பட்ட இவளை இனி குழந்தை என்று எண்ணமுடியாத ஏக்கம் மேலிட்டது.
விடியற்காலையில் ஆழ்ந்து உறங்கிகொண்டிருந்த மகளும் மனைவியும் விழிக்ககூடாதே என்ற கவலையில் இறகுபோல பறந்துகொண்டிருந்தேன், படுக்கை அறையில் ஏதோ எடுக்க சென்ற என்னை மகள் விழித்துக்கொண்டு என்னை அணைத்து "குட் லக் ப்பா" என்று ஒரு சூட்டு முத்தத்தை கொண்டுதுவிட்டு திரும்பவும் படுத்துகொண்டாள். நல் ஒழுக்கம் கொண்ட இந்த ஆறு வயது குழந்தையின் ஆசிர்வதிக்கப்பட்ட தந்தையாக அந்த அதிகாலையில் பூத்துபோனேன்.
போலந்தில் நான் போய் இறங்கும் விமானநிலையத்திலிருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் நிறுவனத்திற்கு செல்லவேண்டும் மனைவி இரண்டு நாட்களாகவே எச்சரித்து கொண்டிருந்தார் ஓட்டுனர் இருக்கும் வாடகை வாகத்தில் செல்லவேண்டுமென்று, ஆனால் இவ்வளவு தொலைவிற்கு அவ்வாறு செய்வது எனக்கு தயக்கமாக இருந்ததால் வாடகை வாகனத்தை நானே ஒட்டிக்கொண்டு செல்வதாக முடிவெடுத்தேன். என்னை தூண்டிய அந்த உள்ளுணர்விற்க்கு தான் நன்றிசொல்லவேண்டும் ஏன்னெனில் ஒரு நாட்டை பற்றி தெரிந்துகொள்ள சாலை பயணம் மிகமுக்கியமானது. போலந்துகாரர்கள்மேல் நான் வைத்திருந்த மற்றும் பிறரால் கூறப்பட்ட கதைகளின் பிம்பம் உடைய தொடங்கியது. ஒரு நாட்டவரை நல்லவர்கள் கெட்டவர்கள் என்கிற பிரிக்கிற பகுப்பே தவறானது. அருமையான சாலைகள், வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்க்கான அனைத்து கூறுகளும் நிரம்பிய கிழக்கு ஐரோப்பிய நாடு போலந்து. இந்த நேரத்தில் இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் ஒரு எச்சரிக்கை இந்த நகரத்தில் புதிதாக நிறைய மென்பொருள் பூங்காக்களையும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகளையும் கண்டேன். இதன் பொருள் உங்கள் ஐரோப்பிய வேலைகளை நீங்கள் நீண்ட நாட்களுக்கு எதிர்பார்காதீர்கள் ஏனெனில் அருமையான உள்கட்டமைப்புகளை இவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் குறிப்பாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து முதல் நாற்பது கிலோமீட்டர்கள் அதிவிரைவு சாலையிலும், மீதி தூரத்தை உட்புற கிராமப்புற சாலையிலும் கடந்தேன். 140 கிலோமீட்டர் வேகத்தில் அதிவிரைவு சாலையில் ஒட்டியது எனக்கும் என் பழைய துபாய் வாழ்வை நினைவுபடுத்தியது. குறிப்பாக நான் ஐரோப்பாவில் பொதுவாக பார்ப்பது வரப்புகள் இல்லாத பரந்த வயல்களை இதனால் தான் உழவு இயந்திரங்களை பயன்படுத்துவது எளிதாக இருப்பதாக நினைக்கிறன். எங்கள் நிறுவத்தின் ஆழ்கடல் துளையிடும் கப்பலிற்கான மூன்று பெரிய மின் தூக்கிகளை(Crane) மாற்ற இருக்கிறோம் அதன் கட்டுமானங்கள் இந்த சிறிய கிராமத்தில் உள்ள மிகபெரிய நிறுவனத்தில் நடைபெறுகிறது, அந்த கட்டுமானங்களை ஆய்வு செய்யவே அங்கு சென்றேன். நினைத்துபாருங்கள் இப்படியான பெரிய கட்டுமானங்களை எடுத்து செல்ல கடற்கரை கப்பல் போக்குவரத்து வசதி இல்லாத சிறிய கிராமம் அது 60 ஆண்டுகளாக 600 தொழிலாளர்களுக்கு வேலைகொடுத்து இயங்கிகொண்டிருகிறது. இவ்வளவு பெரிய கட்டுமானங்களை பகுதி பகுதியாக பிரித்து பெரிய வாகனத்தில் வெறும் 30 அடி அகலம் கொண்ட சாலையில் இரவு நேரங்களில் எடுத்து சென்று சிறிய கப்பல் போக்குவரத்துக்கு வசதி கொண்ட ஆற்றின் வழியாக கடலுக்கு கொண்டுசென்று அங்கிருந்து நார்வேக்கு அனுப்பி வைகிறார்கள். தமிழகத்தில் இத்தனை துறைமுகங்கள் இருந்தும் கப்பல் கட்டும் தொழிலோ, இப்படியான பெரிய எண்ணை எடுக்கும் கடல் மேடைகளை செய்யும் திறனுள்ள தொழில் நிறுவனகள் இல்லாதது பெறிய இழப்பு, ஏனெனில் சிங்கப்பூரில் தான் பல பெரிய ஆழ்கடல் துளையிடும் கப்பல்கள் கட்டப்படுகின்றன அதற்க்கு நோர்வே நிறுவனங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும், அதற்காக இவர்கள் தென் கொரிய நாட்டிக்கு சென்று அங்கு இந்த பெரிய கப்பல்களை கட்டுகிறார்கள். எப்படியான வேலைகளுக்கு இந்தியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலும், அருமையான தொழிலாளர்கள் இருந்தும் நம்மால் செய்யமுடியவில்லை. செய்யவேண்டியவைகளை சரியான நேரத்தில் செய்திருந்தால் நாம் ஏன் வெளிநாடுகளில் அடிமை வாழ்வு வாழவேண்டும்?
வேலை முடிந்து திரும்பும் வழியில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களை அடுத்த பதிவில்.
பயணங்கள் நீளும்....

No comments:
Post a Comment